திருவாலங்காடு,--திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் தெரு, பஞ்சாயத்து அலுவலக தெரு உள்ளிட்ட பகுதிகளில், சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் செய்வதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், கிராம மக்கள் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தால் அதை பறிப்பதாகவும், வீடுகளில் புகுந்து காய்கறி, கனிகளை உண்டு செல்வதுடன், மா, பப்பாளி உள்ளிட்ட பழ மரங்களை சேதப்படுத்தி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் கூட்டமாக திரியும் குரங்குகள் பள்ளிக்கு செல்லும் சிறுவர் -- சிறுமியரை பார்த்ததும் பாய்ந்து வந்து அச்சுறுத்துகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை ஆய்வு செய்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.