போத்தனூர்:போத்தனூரிலுள்ள அருள்முருகன் கோவிலில், 46ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த, 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை கணபதி ஹோமமும் தொடர்ந்து சிவன், பார்வதி, வினாயகர், முருகன் சிலைகள் திறப்பும் நடந்தன.
காலை, 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அன்னதானமும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு, பக்தி பாடல்கள் மற்றும் மிருதங்க நிகழ்ச்சி நடந்தது.
குருசாமி பிள்ளை வீதியிலுள்ள அருள் முருகன் கோவில், பாரதி நகரில் நாகபத்ரகாளியம்மன் கோவில், பாலத்துறை, மதுக்கரை மார்க்கெட், உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களிலும், தைப்பூச திருவிழா நடந்தது.
திருமலையாம்பாளையத்தில் பக்தர்கள் அலகு குத்தி, வேண்டுலை நிறைவேற்றினர். அவர்களை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், முருகன் ஊர்வலமாக சென்றார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.