வாலாங்குளம் கரையில் அரச மரங்களால் ஆபத்து! தடுப்புச்சுவர் தாங்காது என்று பொறியாளர்கள் புகார் 

Added : பிப் 05, 2023 | |
Advertisement
கோவை:வாலாங்குளம் கரையிலுள்ள ரோட்டோரத்தில் அரச மரங்களை வளர்ப்பதால், தடுப்புச்சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென்று புகார் எழுந்துள்ளது.கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கிய பொழுது போக்கு இடமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டியுள்ள சுங்கம்-வாலாங்குளம் பை பாஸ் ரோட்டின் தென்பகுதியில், மாநில நெடுஞ்சாலைத்துறை
 வாலாங்குளம் கரையில் அரச மரங்களால் ஆபத்து!  தடுப்புச்சுவர் தாங்காது என்று பொறியாளர்கள் புகார் 

கோவை:வாலாங்குளம் கரையிலுள்ள ரோட்டோரத்தில் அரச மரங்களை வளர்ப்பதால், தடுப்புச்சுவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென்று புகார் எழுந்துள்ளது.

கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வாலாங்குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கிய பொழுது போக்கு இடமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டியுள்ள சுங்கம்-வாலாங்குளம் பை பாஸ் ரோட்டின் தென்பகுதியில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு, தடுப்புச்சுவரும் கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 15 அடி உயரமுள்ள இந்த தடுப்புச்சுவரின் கீழ் பகுதியில், குடியிருப்புப் பகுதிக்கான ரோடும், வீடுகள் உள்ளிட்ட சில கட்டடங்களும் உள்ளன.

ரோட்டில் செல்லும் வாகனங்கள் மற்றும் குளத்திலுள்ள தண்ணீராலும் ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் வகையிலும், தெற்குப் பகுதியிலுள்ள குடியிருப்பு மற்றும் ரோட்டைப் பாதுகாக்கும் வகையிலும், இந்த சுவர் கட்டப்பட்டுள்ளது.

இந்த சுவருக்கும், ரோட்டுக்கும் இடையிலுள்ள இடத்தில், மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், தடுப்புச்சுவரை ஒட்டி வளர்க்கப்படும் இந்த மரங்களால், தடுப்புச்சுவருக்கும் அதையொட்டியுள்ள கட்டடங்களுக்கும், ரோடுக்கும் பாதிப்பும், ஆபத்தும் ஏற்படுமென்ற அச்சம் எழுந்துள்ளது.

அதிலும், அரசமரங்கள் வளர்க்கப்படுவது, இந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, இன்ஜினியர்கள் சிலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அரச மரங்கள் ஆழ்ந்த மற்றும் அகன்ற வேர்களை கொண்டவை என்பதால், பக்கவாட்டிலுள்ள தாங்கு சுவர்களின்மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தி, அவற்றை உடைத்து விடும் அபாயம் இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மரக்கன்றுகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் 'பேவர்ஸ் ப்ளாக்' பதிப்பதே, சிவராம் நகர் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமென்று அதில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் மரங்களை அகற்றக்கூடாது என்று வலியுறுத்தும் சூழல் ஆர்வலர்கள், அந்த இடத்தில் வேர்கள் அதிகம் பரவாத, மலர் வகை மரங்களை வளர்க்கலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கின்றனர்.

சூழல் பாதுகாப்புடன், சாலை மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, அந்த இடத்தில் எந்த வகை மரங்களை வளர்க்கலாம் அல்லது அவற்றை அகற்ற வேண்டுமா என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X