கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் குளத்தை சுற்றி குப்பை் குவிக்கப்படுவதால், பொதுமக்களும், பக்தர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி நகரின் மத்தியில், பரந்து விரிந்து காணப்படும் ஞானவேல் முருகன் கோவில் குளம் அமைந்துள்ளது. குளத்தின் நான்கு திசைகளிலும், சாலைகள் உள்ளன.
சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது.
அப்படி சேகரிக்கும் குப்பையை, குளத்தை சுற்றி குவித்து வருகின்றனர். கணிசமான அளவில் குப்பை சேர்ந்ததும், லாரிகள் வாயிலாக வேறு இடம் மாற்றப்பட்டு வருகிறது.
குளத்தை சுற்றி குப்பை குவிப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் பாதிப்பதாக பொது மக்களும், கோவில் வரும் பக்தர்களும் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
குளத்தை சுற்றி குப்பை குவிப்பதை தவிர்த்து, குப்பை சேகரித்ததும், உடனடியாக அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.