திருத்தணி,-திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணி ரோட்டரி சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது.
முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலர் சுப்ரமணி வரவேற்றார். இதில், பம்மல் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 110 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், 40 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, வாகனம் வாயிலாக சென்னை பம்மல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அறுவை சிகிச்சை முடிந்ததும் ரோட்டரி சங்கத்தினர் வாகனம் வாயிலாக மீண்டும் திருத்தணி நகருக்கு கொண்டு வந்து விடுவர்.
இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தினர் செய்திருந்தனர்.