கோவை:மூதாட்டியை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகைகளுக்காக, 62 வயது மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மூதாட்டியை கொலை செய்த, சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார், 19 என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட வசந்தகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க, கோவை ரூரல் எஸ்.பி.,பத்ரிநாராயணன், கோவை கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட, கோவை கலெக்டராக இருந்த சமீரன், வசந்தகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.