கோவை;வேலாண்டிபாளையம், மாரியம்மன் கோவிலில், நாளை மற்றும் நாளை மறுதினம் அம்மனுக்கு சிறப்பு தீர்த்த அபிஷேக பூஜை நடக்கிறது.
மாரியம்மன் கோவிலில், புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள், தடாகம் ரோடு விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தல் நிகழ்ச்சி, நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு தீர்த்த குடங்கள் ஊர்வலம் நடக்கிறது.
நாளை மறுதினம் காலை, 6:00 மணிக்கு, ஜோதிட ரத்னா சிவஸ்ரீ சதீஸ் சிவாச்சாரியரின் ஹோம பூஜை, அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, மாவிளக்கு படைத்தல், 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.