திருவாலங்காடு-திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரத்தில் செயல்படும் ஜெயா வேளாண் கல்லுாரி மாணவியர், உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி, திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விழிப்புணர்வுஏற்படுத்தினர்.
இதில், புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், புற்று நோய் வராமல் தடுக்கும் எச்சரிக்கைகள் குறித்தும் விளக்கினர்.
மேலும், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் கண்டறிய சுய பரிசோதனை பற்றியும், சிகரெட் வாயிலாக வரும் நுரையீரல் புற்றுநோய் குறித்தும் பொது மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.
இதில் அரசு மருத்துவர் புஷ்பா உட்பட பலர் பங்கேற்றனர்.