திருவள்ளூர்;திருவள்ளூர் அடுத்த, வெங்கத்துார் கண்டிகையைச் சேர்ந்தவர் சிவானந்தம், 41. இவர், மேல்நல்லாத்துாரில் புதிதாக கட்டிய வீட்டில், 1ம் தேதி கிரகப்பிரவேசம் நடத்தினார்.
பின், மறுநாள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு மற்றும் மொபைல்போன் ஆகியவை திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து, சிவானந்தம் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி, மணவாள நகரைச் சேர்ந்த, சிவபாலன், 42, என்பவரை கைது செய்து, வெள்ளி குத்துவிளக்கை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.