திருவள்ளூர்,-திருவள்ளூர் சிவ - விஷ்ணு கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பெருமானுக்கு காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளலாருக்கும் அபிஷேகம் நடந்தது.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு, நேற்று காலை சிறப்பு அலங்காரம் நடந்தது.
கோவில் வளாகத்தில், வள்ளலாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி, பெரும்பேடு முத்து குமார சாமி, குமரஞ்சேரி முருகன் ஆகிய கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
பொன்னேரி அகத்தீஸ்வர் கோவில், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், மீஞ்சூர் ஏகாம்பரநாதர், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவில்களில் உள்ள முருகன் சன்னிதிகளில் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.