மக்கள் தான் இந்த நாட்டின் எஜமானர்கள். மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவரும் ஊழியர்கள். அரசியல் சாசனம் தான் நமக்கு வழிகாட்டி. யாரும், யாரையும் எச்சரிக்க முடியாது.
கிரண் ரிஜிஜு, மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,
கோவில் கட்டுகிறோம்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என உறுதி அளித்திருந்தோம். ராமர் பிறந்த இடத்தை பாபர் ஆக்கிரமித்து இருந்ததால், அந்த ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, இப்போது கோவில் கட்டி வருகிறோம்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
தேர்தலில் போட்டியிட தயாரா?
மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், அவரது ஆதரவாளர்களும் தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா; அதற்கான தைரியம் அவர்களுக்கு உள்ளதா?
ஆதித்ய தாக்கரே, மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர், சிவசேனா