கோவை, 'கொடிசியா' வளாகத்தில், திறன் மேம்பாட்டு திட்டம் குறித்து, தொழில் அமைப்பினருடன், மத்திய, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன், அங்கு வந்த அமைச்சர், தொழில் துறையினரிடம், மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டு, குறிப்பெடுத்துக் கொண்டார்.
எந்த, 'பந்தா'வும் இல்லாமல், சாதாரணமாக எல்லாரிடமும் பேசினார். மேடையில் அரசின் சாதனைகளை தெளிவாக எடுத்துச் சொன்னதுடன், தொழில் துறையினரின் கேள்விகளுக்கு உடனே பதில் அளித்தார். தொடர்ந்து, தொழில் துறையினருடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்.
பார்வையாளர் ஒருவர், 'பந்தா இல்லாத வித்தியாசமான அமைச்சரா இருக்காரே...' என, புகழ, மற்றொருவர், 'அலப்பறைக்கு பஞ்சமில்லாத நம் தமிழக அமைச்சர்களையே பார்த்து பழகிட்டதால, இவரை போன்றவரை பார்த்தா நமக்கு வித்தியாசமா தான் தெரியுது...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.