வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
மும்பை-குடிபோதையில் மனைவியை தாக்கியதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
![]()
|
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி, 51. இவரும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளார். காம்ப்ளி, மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில், மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.
சமீபத்தில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற காம்ப்ளி, தன் மனைவி ஆண்ட்ரியாவை, தகாத வார்த்தையால் திட்டியும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இதைப் பார்த்த அவரது மகன், சமரசம் செய்ய முயற்சித்துள்ளார். இதை பொருட்படுத்தாமல், வீட்டில் உள்ள சமையல் பாத்திரத்தை மனைவியின் மீது வீசி காம்ப்ளி தாக்கியுள்ளார்.
![]()
|
இதில் காயமடைந்த ஆண்ட்ரியா, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின், தன் கணவர் காம்ப்ளி மீது போலீசில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் காம்ப்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement