வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-''வெளிநாட்டு விமானப் படையினருடன் இணைந்து சர்வதேச போர் பயிற்சியில் ஈடுபட்டது, மிகப்பெரிய அனுபவத்தை தந்தது,'' என இந்திய விமானப்படையின் முதல் பெண் பைலட்டான அவ்னி சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
![]()
|
ராணுவ கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியா - ஜப்பான் இடையிலான போர் பயிற்சி, கடந்த மாதம் கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ள ஹையாகுரி பகுதியில் நடந்தது.
இந்த பயிற்சியில் 150 பேர் பங்கேற்றனர். இதில், இந்திய விமானப் படை வீராங்கனை அவ்னி சதுர்வேதியும் இடம்பெற்றார்.
பயிற்சி முடிந்து நாடு திரும்பியுள்ள இவர், ஜப்பான் போர் பயிற்சி குறித்து கூறியதாவது:
இந்த பயிற்சியில் பங்கேற்றது பெருமையாக உள்ளது. வானில் பறந்து பயிற்சிகளில் பங்கேற்பது விவரிக்க முடியாத அனுபவம்.
![]()
|
குறிப்பாக, வெளிநாட்டு விமானப் படையினருடன் கூட்டாக இணைந்து பங்கேற்றது, இது முதல்முறை என்பதால் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது.
இந்த அற்புதமான வாய்ப்பு மிகப்பெரிய கற்றலை எனக்குத் தந்தது. ஆர்வமுள்ள இளம்பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சொல்வது எல்லாம், வானமே உங்களுக்கு எல்லை.
இவ்வாறு இவர் கூறினார்.
வெளிநாட்டில் நடந்த போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை அவ்னி சதுர்வேதி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement