வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-குஜராத்தின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் வகையில் 'ஏசி' வசதியுடன் கூடிய சொகுசு 'டீலக்ஸ்' ரயிலை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
நம் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.
![]()
|
இந்த வகையில், குஜராத் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், 'பாரத் கவுரவ் டீலக்ஸ்' சுற்றுலா ரயில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த சுற்றுலா ரயிலின் பயணம், வரும் 28ல் புதுடில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்குகிறது.
நான்கு முதல் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், ஒரு சமையலறை, இரண்டு உணவகங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
![]()
|
குறைந்தது 156 பேர் பயணிக்கும் வகையில், பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எட்டு நாட்கள் பயணத்தில் குஜராத்தில் உள்ள முக்கிய புனித பாரம்பரிய தளங்களை காண முடியும்.
அங்குள்ள ஒற்றுமை சிலை, சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், ஆமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement