சம்பா,- ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலம் நேற்று இடிந்து விழுந்தது.
ஹிமாசல பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில், நேற்று பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பா - பார்மூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் நிலச்சரிவின் காரணமாக முற்றிலும் இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. பார்மூர் பழங்குடியினர் வசிக்கும் பகுதியை சம்பா நகருடன் இணைக்கும் முக்கிய பாலம் இடிந்ததால், மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சேத மதிப்புகளை ஆய்வு செய்து சாலை சீரமைப்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.
முன்னதாக நேற்று முன்தினம் நடந்த நிலச்சரிவின் போது சம்பா மாவட்டத்துடன் சோலி கிராமத்தை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்ததில், இரண்டு வாகனங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.