வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு-இலங்கையில், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது சட்ட திருத்தம் குறித்து, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கேயிடம் பேச்சு நடத்திய, நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், அச்சட்டத்தை விரைவில் அமல்படுத்தும்படி வலியுறுத்தினார்.
![]()
|
நம் அண்டை நாடான இலங்கையில் நேற்று முன்தினம் ௭௫வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில், நம் நாட்டின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பங்கேற்றார்.
அன்று மாலை, அமைச்சர் முரளீதரன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து பேசினார்.
இது குறித்து இலங்கை அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் வசிக்கும் சிறுபான்மை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் ௧௩வது சட்ட திருத்தத்தின் நிலை குறித்து, இந்திய அமைச்சர் முரளீதரன், இலங்கை அதிபரிடம் கேட்டறிந்தார்.
இவர்களது பேச்சு, ௧௩ஏ சட்ட திருத்தம் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது.
அப்போது, முரளீதரன் இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி வலியுறுத்தினார்.
![]()
|
சுதந்திர தின விழாவின் தொடர்ச்சியாக, இலங்கையில் உள்ள இந்திய துாதர் கோபால் பக்லே, மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட, ௫௦ பஸ்களை வழங்கினார்.
இலங்கையின் புறநகர் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த, இந்தியா நன்கொடையாக ௫௦௦ பஸ்கள் வழங்குகிறது.
அதில், இத்துடன் ௧௬௫ பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பஸ்கள் மார்ச் மாதத்துக்குள் வழங்குவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement