வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாண்டியாகோ-சிலியில், வரலாறு காணாத வெப்பத்தால் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ளது.
![]()
|
தென் அமெரிக்க நாடான சிலியில் ஒரு வாரத்துக்கும் மேலாக வனப்பகுதிகளில் காட்டுத் தீ பயங்கரமாக எரிந்து வருகிறது. ௧௫௦ இடங்களில் காட்டுத் தீ எரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நிலவரப்படி, ௨௫௧ இடங்களில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இச்சம்பவத்தில் உயிர்ப்பலி நேற்று ௨௨ ஆக உயர்ந்தது. மேலும், ௧௬ பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ௧௦ பேர் மாயமாகி உள்ளனர்.
இதில் மூலிகை மரங்கள், செடிகள் உள்ளிட்டவை தீக்கிரையாகி உள்ளன. பல்வேறு இடங்கள் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிவியா நாட்டு ஹெலிகாப்டரின் பைலட், விபத்தில் சிக்கி பரிதாப மாக உயிரிழந்தார்.
![]()
|
இதற்கிடையே, லா அரவ்கானியா மற்றும் பியோபியோ ஆகிய பகுதி களில், ஏற்கனவே பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
''இச்சம்பவம், பருவநிலை மாற்றத்தின் விளைவுக்கான ஒரு எச்சரிக்கை மணி,'' என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்தார்.
பற்றி எரியும் இந்த காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் உதவும்படி, சர்வதேச நாடுகளுக்கு சிலி அதிபர் கேப்ரியல் போரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement