வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'இலவச சேலை வழங்கிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில், 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும்' என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமை இன்மையால், வயது முதிர்ந்த, நான்கு பெண்கள், பரிதாபமாக தங்கள் இன்னுயிரை இழந்த துயர நிகழ்ச்சி, வாணியம்பாடியில் நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் விழாவுக்கு, அரசின் இலவச வேட்டி - சேலையை வழங்கி இருந்தால், தனியார் வழங்கும் இலவச சேலையை வாங்க, ஒரே நேரத்தில், 1,500 பெண்கள் குழுமியிருக்க வாய்ப்பில்லை.
கூட்ட நெரிசல் காரணமாக, ஏழை பெண்கள், தங்கள் இன்னுயிரை இழந்திருக்க மாட்டார்கள். நடந்தேறிய இந்த துன்ப நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீதும், இந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![]()
|
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரண தொகையை, 10 லட்சம் ரூபாயாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
குறித்த காலத்தில் இலவச வேட்டி, சேலையை வழங்காத தி.மு.க., அரசு, இந்த நிகழ்வுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement