வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'வாணி ஜெயராம், தெய்வ பக்தியும், தொழில் பக்தியும் மிக்கவர்,'' என, பின்னணி பாடகி பி.சுசிலா, உருக்கமாக பேசி, அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள 'வீடியோ' பதிவு:
நான், ஹைதராபாதில் இருக்கிறேன். வாணி ஜெயராம் மறைந்த செய்தியை, என்னால் நம்ப முடியவில்லை; அதிர்ச்சி அடைந்தேன்.
![]()
|
அவர் அனைவருடைய உள்ளத்திலும் நிறைந்திருக்கிறார். அவரும், நானும் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளோம். மேடையில் இருக்கும்போது, யாருடனும் பேசவோ, சிரிக்கவோ மாட்டார். மிகவும் தெய்வ பக்தியும், தொழில் பக்தியும் மிக்கவர். நான், பாலசுப்ரமணியம், ஜானகி இருக்கும் நேரங்களில் பேசி, சிரிப்பார்.
![]()
|
அவர் பாடிய 'ஏழு ஸ்வரங்களுக்குள்...' போன்ற பாடல்களை யாரும் பாட முடியாது. அவருக்கு தனிப்பட்ட குரல் வளம் இருந்தது. இங்கு நிறைய போட்டிகள் இருந்தபோது, அவர் தனித்தன்மையுடன் இருந்தார்.
அவரின் மறைவு கலைக்கும், நாட்டுக்கும் இழப்பு. என்ன செய்வது, ஆண்டவன் அவருக்கான காலம் முடிந்தது என்று அழைத்திருக்கலாம். அவர் இந்நேரம், அவரின் கணவரை சந்தித்து இருப்பார்.
இவ்வாறு சுசிலா உருக்கமாகப் பேசியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement