திருநெல்வேலி,--கூடங்குளத்தில், மனைவியுடன் தவறாக பழகிய நண்பரை, அரிவாளால் வெட்டியவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சேர்ந்தவர் செந்தில், 42; வெளிநாட்டில் பணிபுரிந்தார். மனைவி, குழந்தைகள் கூடங்குளத்தில் வசித்தனர்.
இவர்களது வீட்டுக்கு அருகில் வசித்தவர் கிருபாகரன், 42; செந்திலின் நண்பர்; திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
செந்தில் வெளிநாட்டில் பணிபுரிந்த போது, அவரது குடும்பத்திற்கு கிருபாகரன் உதவி செய்து வந்தார். அப்போது அவர், செந்தில் மனைவியுடன் தவறாக பழகியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த செந்தில், மனைவியை கண்டித்தார். இதனால் கோபமுற்ற மனைவி, இரண்டு ஆண்டு களுக்கு முன், குழந்தைகளுடன் கன்னியாகுமரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில், நேற்று முன்தினம் கிருபாகரனை அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்த கிருபாகரன், நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், செந்தில், கூடங்குளத்தில் உள்ள தோட்டத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.