வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவு சின்னத்தை எதிர்க்கின்றனர்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியுள்ளார்.
![]()
|
அவரது அறிக்கை:
தன், 13 வயதில், அரசியலில் பிரவேசம் செய்து, 95 வயது வரை தமிழ் சமுதாயத்திற்காக அயராது உழைத்த கருணாநிதிக்கு, கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
தம் பொது வாழ்க்கையை, எழுத்து மற்றும் பேச்சை அடிப்படையாக வைத்து, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்து, சமூகநீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர்.
கடற்கரை மணல் பரப்பில் இருந்து, 360 மீட்டர் தொலைவில், நடுக்கடலில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைப்பதால், சுற்றுச் சூழலுக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என, தெரியவில்லை.
தொழில் நுட்பக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, கடற்கரை பகுதியில் ஆய்வு செய்து, அங்கு ஆமைகளோ, மீன்களோ இல்லை என, அறிக்கை வழங்கி இருக்கிறது.
![]()
|
நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களும் கடலில் தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு, 10 கடல் மைல் தொலைவிற்கு, கடலில் தான் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்தை விமர்சிக்கின்றனர். இத்தகைய விமர்சனங்களை வைப்பவர்கள் யார் என, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.