வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் குறித்து வழக்குப் பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம்' என, போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
![]()
|
அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:
கடத்தல் உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, எஸ்.பி.,க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம்; அது தேவையும் இல்லை.
![]()
|
பதற்றமான, நியாயமான மற்றும் முக்கிய விவகாரம் தொடர்பாக, தேவைக்கு தகுந்தவாறு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரே வழக்கு பதிந்து, தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.
இதற்காக, எஸ்.பி., உட்பட மேல் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement