வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''இந்திய உணவு கழகத்திடம் இருந்து கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால், தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும்,'' என, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
![]()
|
அவர் கூறியதாவது:
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின், 'பயோமெட்ரிக்' எனப்படும் விரல் ரேகை பதிவு வாயிலாக, 98 சதவீதம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 18.11 லட்சம் பேருக்கு, 11 ஆயிரத்து 618 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு எடுத்த நடவடிக்கையால், அரிசி கடத்தல் குறைந்துள்ளது.
![]()
|
கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை, 11 ஆயிரத்து 500 வழக்குகள் பதியப்பட்டதுடன், 132 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்திய உணவு கழகத்திடம், 10 லட்சம் கிலோ கோதுமை கேட்கப்பட்டு உள்ளது. இந்த கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால், தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement