காலாவதி வாகனங்கள் சட்டம் தமிழகத்தில் அமலாகுமா?

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை-மத்திய அரசின் காலாவதி வாகனச் சட்டத்தின்படி, பழைய வாகனங்கள், ஏப்., 1ம் தேதி முதல் அழிக்கப்பட உள்ளன. நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான சொந்த பயன்பாட்டு வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, ஏப்ரல் 1 முதல் அமலாகிறது. இதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-மத்திய அரசின் காலாவதி வாகனச் சட்டத்தின்படி, பழைய வாகனங்கள், ஏப்., 1ம் தேதி முதல் அழிக்கப்பட உள்ளன.



latest tamil news


நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான சொந்த பயன்பாட்டு வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, ஏப்ரல் 1 முதல் அமலாகிறது.

இதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் இயக்கப்படும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழக அரசு அது போன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், வேன்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்களை அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாடகை வாகன உரிமையாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் வரிகள், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன.

இதனால், போக்குவரத்து துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனம் வாங்க வங்கிக் கடன் பெற்றால், அது முடியவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன; அதன்பின் தான் உரிமையாளருக்கு வாகனம் சொந்தமாகிறது.

இந்நிலையில், உடனே இந்த சட்டம் அமலானால், வாகன உரிமையாளர்கள் கடுமையான இழப்பை சந்திப்பர். இந்த சட்டம் அமலானால், பலர் வாடகை வாகனத் தொழிலை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும். அதேபோல், தமிழக அரசின் நிதிநிலையும் மோசமாக உள்ளது.

இந்நிலையில், காலாவதியான பஸ்களை அழித்து விட்டு புதிய பஸ்களை வாங்கினால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே உள்ளதுபோல், அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் தொகையுடன் மீதத் தொகை செலுத்தி, புதிய வாகனங்களையும் வாங்க முடியாது. இதனால் தனியார் மட்டுமின்றி, அரசும் கடுமையாக பாதிக்கப்படும்.


latest tamil news


இந்த சட்டத்தை நேரடியாக அமல்படுத்துவதற்குப் பதில், வாகனத்தைக் கட்டுப்படுத்தலாம். பழைய வாகனங்களை அரசே விலை நிர்ணயித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன், புதிய வாகனம் வாங்கும் வகையில், குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மத்திய அரசின் காலாவதி வாகனச் சட்டம் குறித்து, தமிழக அரசு இன்னும் கொள்கை முடிவு எடுக்கவில்லை' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

தேனி சிவா - Theni,இந்தியா
18-பிப்-202315:25:41 IST Report Abuse
தேனி சிவா வண்டியின் ஆயுளே 15 வருடங்கள் தான் என மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-202314:11:38 IST Report Abuse
g.s,rajan தமிழ்நாட்டுல மொதல்ல இந்த காலாவதியான வாகனங்களை ஒழிக்க இந்தக் காயலாங்கடை ,லொட ...லொட ,கட.. கட அரசுப்பேருந்தில் இருந்து ஆரம்பிங்க .
Rate this:
Cancel
Kanakala Subbudu - Chennai,இந்தியா
06-பிப்-202312:45:22 IST Report Abuse
Kanakala Subbudu வாகனம் வாங்குபவர்கள் எல்லோரும் 15 வருடங்களில் அதன் முழு திறனையும் பயன் படுத்துவர் என்று சொல்ல முடியாது. வாகனம் பயன்படுத்தும் நிலையில் இருந்தால் எதற்கு தேவையன்றி அழிக்க வேண்டும். சொந்த வண்டி வைத்திருப்போர் வாடகை வண்டி போல் உபயோகப்படுத்த மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X