நெய்வேலி : வடலுார் ராமலிங்க வள்ளலாரின் 152 வது ஜோதி தரிசன விழாவையொட்டி பா.ம.க. வடக்கு மாவட்டம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வடலுார் ராமலிங்க வள்ளலாரின் 152 வது ஜோதி தரிசன விழாவையொட்டி வடக்குத்து ஜெ & ஜெ ஷோரூம் வளாகத்தில் நடந்த அன்னதானத்தை மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்தார். முன்னதாக மனித இனம் மகிழ்ச்சியுடன் இனிவரும் காலங்களில் இயற்கையோடு ஒன்றி வாழ வலியுறுத்திய வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வாழவும் பிரார்த்தனை செய்தனர். மாவட்ட தலைவர் டாக்டர். நவீன் பிரதாப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.வைத்தி, வேங்கை சேகர், சக்திவேல், புலவன்குப்பம் சேகர், மாவட்ட வன்னியர் சங்கத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன், மு.மாவட்ட செயலர் காசி.நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், சிவக்குமார், மணிவாசகம் ,கவுன்சிலர்கள் செல்வக்குமார், சண்முகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.