திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று 30 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் தர்ம தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் தரிசனத்துக்கு 30 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு நான்கு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு பால் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.