பார்மர்: ராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றபாபா ராம்தேவ், பல்வேறு மதங்களை ஒப்பிட்டுப் பேசினார்.
மேலும், அவர் பேசுகையில் ஹிந்து பெண்களை மற்ற மதத்தினர் கடத்துவதாகவும், மதமாற்றம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதம் பற்றியும் பேசினார்.
ராம்தேவின் இந்த பேச்சு, மத உணர்ச்சியை துாண்டும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருந்ததாக,பத்தாய் கான் என்பவர் அளித்த புகாரின்அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.