'கடமை'க்கு நடக்குது நீட் வகுப்பு: என்னாவது ஏழையின் டாக்டர் கனவு?

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
கோவை: நீட் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இலவச பயிற்சி வகுப்பு, தாமதமாக துவங்கப்பட்டதால், சிலபஸ் முடிப்பதே குதிரைகொம்பு தான் என்ற, கருத்து எழுந்துள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு, மாவட்ட வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு, சனிக்கிழமைதோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.கோவை மாவட்டத்தில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: நீட் தேர்வு, மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இலவச பயிற்சி வகுப்பு, தாமதமாக துவங்கப்பட்டதால், சிலபஸ் முடிப்பதே குதிரைகொம்பு தான் என்ற, கருத்து எழுந்துள்ளது.latest tamil newsபள்ளிக்கல்வித்துறை சார்பில், நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்கு, மாவட்ட வாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு, சனிக்கிழமைதோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில், 10 மையங்களில் நடக்கும், நீட் வகுப்பில் பங்கேற்க, 550 மாணவர்கள் பதிவு செய்தனர். இவர்களுக்கு, நவ.,இறுதியில் தான், வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது வரை, ஐந்து வகுப்புகள் மட்டுமே நடந்துள்ளன. கொடுக்கப்பட்ட சிலபஸில் கால்பகுதி கூட, இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை.

இம்மாத இறுதி வரை மட்டுமே, நீட் வகுப்பு நடத்த முடியும். மார்ச் மாதம் துவங்கிவிட்டால், பிளஸ் 2 செய்முறை பொதுத்தேர்வு, எழுத்துத்தேர்வு நடப்பதால், தொடர்ச்சியாக வகுப்புகள் நடக்காது.
ஏப்., மாதத்தில் தேர்வு முடிந்ததும், மீண்டும் நீட் வகுப்பு துவங்கினால் கூட, சிலபஸ் முடிப்பது இயலாத காரியம் என்ற கருத்து எழுந்துள்ளது.


latest tamil newsமே மாதம் நீட் தேர்வு நடப்பதாக, உத்தேச அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், இலவச பயிற்சி வகுப்பு, தாமதமாக துவங்கியதால், மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்த, போதிய அவகாசம் இருக்காது என, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

முதுகலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேரலாம். இதற்காக, கடந்த ஆட்சியில் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக, நீட் வகுப்புகள் நடக்கவில்லை. நடப்பு கல்வியாண்டு திட்டமிட்டபடி துவங்கியும், நீட் வகுப்பு மட்டும், நவ.,இறுதியில்தான் ஆரம்பிக்கப்பட்டது.

'மாநிலம் முழுக்க, ஐந்து வகுப்புகளே நடந்துள்ளன. இனி மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு கவனம் செலுத்துவர். நீட் வகுப்பிற்கு வருகைப்பதிவு குறையும்.
'பொதுத்தேர்வுக்குப் பின், போதிய அவகாசம் இருக்காது. இதனால், நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. குறுகிய காலத்தில், மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி வழங்குவது என்பது குறித்து, பாடத்திட்ட குழு ஆய்வு செய்ய வேண்டும். மாதிரி தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரித்தல், சிலபஸ் முடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

07-பிப்-202308:32:28 IST Report Abuse
பேசும் தமிழன் நீட் வகுப்பு எதற்கு ..... செங்கல் திருடன் எங்கே ???
Rate this:
Cancel
Purushothaman Lin - Coimbatore,இந்தியா
06-பிப்-202317:59:49 IST Report Abuse
Purushothaman Lin நீட் தமிழ் 2023 , நீட் உயிரியல் வினா மற்றும் விடைகள், நீட் வேதியியல் வினா மற்றும் விடைகள், நீட் இயற்பியல் வினா மற்றும் விடைகள் , நீட் வினாக்கள் - விடைகள் - விளக்கங்கள், நீட் தமிழ் 17500+ வினா மற்றும் விடைகள், நீட் தமிழ் 500+ பயிற்சித்தேர்வுகள், நீட் தமிழ் 100+ மாதிரித்தேர்வுகள், நீட் தமிழ் வழி பயிற்சித்தேர்வுகள், நீட் தமிழ் Online Test Series, நீட் தமிழ் வழி மாதிரித்தேர்வுகள், நீட் தமிழ் விடையுடன் கூடிய வினாக்கள், நீட் உயிரியல் | நீட் இயற்பியல் | நீட் வேதியியல் - www.neettamil.com
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
06-பிப்-202317:51:45 IST Report Abuse
Ram விடியல் ஆட்சியென்றால் சும்மாவா .... ஒரே பீலதான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X