விழுப்புரம் : விழுப்புரத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விழுப்புரம் நகர தி.மு.க., அலுவலகத்தில், அண்ணாதுரை படத்திற்கு, மாவட்ட செயலாளர் புகழேந்தி எம். எல்.ஏ., தலைமையில் மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின், கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிட நலக்குழு அணி இணைச் செயலாளர் புஷ்பராஜ், துணைச் செயலாளர்கள் இளந்திரையன், கற்பகம், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, முருகவேல், ராஜா, பிரபாகரன், ரவிதுரை, கணேசன், முருகன், செல்வமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், வளவனுார் நகர செயலாளர் ஜீவா, இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், நகர பொருளாளர் இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க.,
பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, தெற்கு நகர அ.தி.மு.க., செயலாளர் பசுபதி தலைமையில், மாலை அணிவிக்கப்பட்டது. வடக்கு நகர செயலாளர் ராமதாஸ், நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
பின், மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் உள்ள படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட ஜெ., பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செங்குட்டுவன், கவுன்சிலர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர்கள் தனுசு, ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், நிர்வாகிகள் ஜியாவுதீன், கலுவு உட்பட பலர் பங்கேற்றனர்.