வங்கதேசத்தில் 14 ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
டாக்கா: வங்கதேசத்தில் 14 ஹிந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகள் மீது மர்மநபர்கள்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோயில்கள் மீது தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை கோயில் சுவர்களில் எழுதி அராஜகத்தில்

டாக்கா: வங்கதேசத்தில் 14 ஹிந்து கோயில்களில் உள்ள சாமி சிலைகள் மீது மர்மநபர்கள்

தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




latest tamil news


ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோயில்கள் மீது தாக்குதல் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை கோயில் சுவர்களில் எழுதி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில், வங்கதேசத்தில் 14 ஹிந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோயில்களில் 14 சாமி சிலைகள் சூறையாடப்பட்டு உள்ளன. பல கிராமங்களில் உள்ள கோயில்களில் மர்மநபர்கள் சூறையாடியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.



latest tamil news


உபாசிலா பூஜை கொண்டாட்ட குழுவின் தலைவர் பர்மன் கூறுகையில், சிலைகள் மீது மர்மநபர்கள் கடுமையாக சேதம் செய்துள்ளனர். குற்றவாளிகள் அடையாளம் குறித்து காணப்படும். விசாரணைக்குப் பிறகு நீதி கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.


ஹிந்து சமூகத் தலைவர் சட்டர்ஜி கூறுகையில், கடந்த காலத்தில் இது போன்ற கொடூரமான சம்பவம் எதுவும் இங்கு நடக்கவில்லை. இப்பகுதி எப்போதும் சிறந்த மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் உள்ள பகுதியாக அறியப்படுகிறது. சதிக்காரர்கள் யார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

canchi ravi - Hyderabad,இந்தியா
11-பிப்-202313:52:19 IST Report Abuse
canchi ravi நமது ராணுவ தலைவர் அப்பொழுதே சொன்னார் நாம் வங்கதேசத்தில் நுழையாமல் பாகிஸ்தானியரும் வங்கதேசத்தினரும் தங்களுக்குள் போராடுவதை வேடிக்கை பார்க்கவேண்டும் என்று. மிகப்பெரிய தவறு செய்து நம் பொருளாதாரமே குலைட்த்தோம் அன்று. இவர்கள் மாறமாட்டார்கள்.
Rate this:
Cancel
07-பிப்-202308:29:37 IST Report Abuse
பேசும் தமிழன் சைக்கோ .... தெருமாவலவன் ... ஆமை கறி சைமன்.....நம்ம ஹாசன்....கனி அக்கா மற்றும் மணி அக்கா....விடியல் தலைவர்.... உங்கள் கருத்தை ....தமிழக மக்கள்.... இல்லையில்லை ....தமிழ்நாடு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு உள்ளார்கள்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
06-பிப்-202320:16:23 IST Report Abuse
jagan எல்லாம் தெரிந்து திருப்பூர் முதலாளிகள் காசுக்காக இந்த வங்கதேச வன்முறையாளர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்படவேண்டும். இல்லை என்றால் இங்கும் அது போன்ற நிகழ்வுகள் நடக்க ரொம்ப நாள் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X