வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில், இன்று (பிப்.,06) 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகளுடன் செயல்பட வேண்டிய, உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு 27 நீதிபதிகள் மட்டுமே இருந்தனர். இதையடுத்து, புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, 'கொலீஜியம்' கடந்த ஆண்டு டிச., 13ல் பரிந்துரை செய்தது.
அதில் பங்கஜ் மிட்டல், சஞ்சய் கரோல், பி.வி.சஞ்சய் குமார், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா 5 நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில், இன்று (பிப்.,06) 5 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்று கொண்டனர். தற்போது பதவியேற்ற 5 புதிய நீதிபதிகளை சேர்த்து நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

1. பங்கஜ் மிட்டல்:
* இவர் கடந்த 1985ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். 2006ம் ஆண்டு அலகாபாத் உயர்நிதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி வகித்தார்.
* இதையடுத்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
2. சஞ்சய் கரோல்:
* இவர் 19896ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தனது பணியாக துவக்கினார்.
* 2017-2018 ம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2019ம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார்.
3. பி.வி.சஞ்சய் குமார்:
* 2019ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2021ம் ஆண்டு முதல் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.
4. அசானுதீன் அமானுல்லா
* பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், 1991ம் ஆண்டு முதல் வழங்கறிஞராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் தனது பணியை துவக்கினார்.
* இவர் ஆந்திரப்பிரதேசத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.
5. மனோஜ் மிஸ்ரா:
* இவர் 1988ம் ஆண்டு வழங்கறிஞராக தனது பணியை துவக்கினார். பின்னர் 2011ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2013ம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார்.