புதுடில்லி: ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்து, விமானம் போக்குவரத்து இயக்குனரகம் இன்று(பிப்.,06) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து அபராதத்தில் சிக்கி வருகிறது.

சில தினங்களாக விமான நிறுவனங்களில் பிரச்னைக்கு பஞ்சமே இல்லை. கடந்த டிச.,6ம் தேதி பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து புகார் அளிக்காததால், ஏர் இந்தியாவுக்கு ரூ 10 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டது.
கடந்த டிசம்பர் 6ம் தேதி பாரிஸ் டில்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையில் போர்வையில் ஒரு ஆண் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இந்நிலையில், ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து, விமானம் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் இயக்காததால் ஏர் விஸ்தாரா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து அபராதத்தில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.