வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: உழைப்புக்கான மரியாதை இல்லாதது சமூகத்தில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது: மக்கள் எந்த விதமான வேலையை செய்தாலும், அதனை மதிக்க வேண்டும்.
இந்த உலகில் எந்த தொழிலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க முடியாது. இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மைதான் காரணம். உழைப்புக்கான மரியாதை இல்லாதது சமூகத்தில் வேலையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அனைவரும் வேலைகளின் பின்னால் ஓடுகின்றனர்.

அரசு வேலைகள் 10 சதவீதம் மட்டுமே, தனியார் வேலைகள் 20 சதவீதம் மட்டுமே. உலகில் எந்த ஒரு நாடும் 30 சதவீதத்திற்கு மேல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. நாட்டில் பல விவசாயிகளுக்கு அவர்கள் நல்ல வருமானத்துடன் இருந்தாலும் விவசாயம் செய்வதாலேயே இன்னும் திருமணம் நடைபெறுவதில்லை.
இந்தியா உலகின் வழிகாட்டியாக விஸ்வகுருவாக உருவாகும் சூழல் கனிந்துள்ளது. நம் நாட்டில் திறன்களுக்கு குறைவில்லை. எனவே நாம் விஸ்வகுருவான பின்னர் மற்ற வளர்ந்த நாடுகளை போல் இருக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.