அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, "உலகின் மிக அமைதியான அறை" என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft Corporation) தலைமை அலுவலகம் வாஷிங்டனில் ரெட்மாண்டில் அமைந்துள்ளது. 2015ம் ஆண்டு உலகின் அமைதியான அறை அங்கு கட்டப்பட்டது. இது ஒரு தியான அறை போல தோன்றினாலும், ஒரு சிலரால் மட்டுமே இந்த இடத்தில் நீண்ட காலம் செலவிட முடியும். அனிகோயிக் சேம்பர் என்று அழைக்கப்படும் இந்த அறையை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாம்.
மேலும் இது வெளிப்புற சத்தம் நுழையாத வகையில், முற்றிலும் ஒலிப்புகாத பொருட்கள் கொண்டும், உள்பகுதி எவ்வித சத்தமும் இன்றி நிசப்தமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2015ல் கின்னஸ் உலக சாதனைகளில் "உலகின் அமைதியான இடம்" என இடம்பெற்றுள்ளது. அல்ட்ரா- சென்சிட்டிவ் சோதனை முடிவுகளில், அறையின் சராசரி பின்னணி இரைச்சல் -20.35 டெசிபல்கள் என வந்துள்ளது.
![]()
|
உணர இயலும். நீங்கள் மூச்சு விடும் சப்தம் கூட அதிக சத்தமாக கேட்கலாம். நம் காதுகளில் இருந்து பொதுவாக ஒலியை வெளியிடும். காது சவ்வு பகுதிகளில் காற்று அழுத்தம் இருப்பதால் இது போன்று இருக்கும்.
அனிகோயிக் அறையில் நீங்கள் நுழையும் போது, அறை முழுவதும் ஒலியை எதிரொலிக்காத பொருட்கள் இருப்பதால், காற்றின் அழுத்தம் கூட காணாமல் போகும். வெளியே இருந்து எவ்வித ஒலியும் வராது என்பதால், உங்கள் காதுகளில் இருந்து மிக அதிக சத்தத்தை உணர்வீர்கள்.
![]()
|
வெங்காயம் போன்ற உள்கட்டமைப்புடன் விளங்கும் அறை, முழுமையான அமைதியை உருவாக்குவதற்காக கட்டிடத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் வெளி உலகத்திலிருந்தும் வேறுபடுத்தி காட்ட உதவுகிறது. ஆறடுக்கு கான்கிரீட் மற்றும் இரும்பு கொண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஒலி அலைகள் வெளியே சென்று மீண்டும் அறைக்குள் எதிரொலிப்பதைத் தடுக்க, சுவற்றின் உட்புறம், தரையில், மேல்பகுதியில் பைபர்கிளாஸ் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒலியை உறிஞ்சும் கேபிள்களும் பொருத்தப்பட்டுள்ளன.
![]()
|
மைக்ரோபோன்கள், ஹெட்போன்கள், ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ உபகரணங்களும், தொடுதிரை மற்றும் தொடுதிரையில் இடம்பெற்ற கீபோர்டுகள், மவுஸ், பேன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது வெளிவரும் ஒலியின் அளவை பகுப்பாய்வு செய்ய மைக்ரோசாப்ட் இந்த அறையை பயன்படுத்துகிறது.
தொடுதிரை டேப்லெட் , எக்ஸ்பாக்ஸ் கேமிங் சிஸ்டம் மற்றும் ஹோலோலென்ஸ் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் போன்ற சாதனங்களும், வீடியோ காலிங் செயலியான ஸ்கைப் (Skype), கோர்டானா விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் போன்ற சில மென்பொருள்களும் இந்த அறை மூலன் பயனடைந்துள்ளன.