'ஹிஜாப்' அணியக்கோரி இந்திய வீராங்கனையிடம் கறார் காட்டிய ஈரான்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி : ஈரானில் நடந்த பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில், பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையை, 'ஹிஜாப்' அணியக்கோரி கட்டாயப்படுத்தியது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.ஈரான் தலைநர் டெஹ்ரானில்,மகளிர் பாட்மின்டன் போட்டிகளுக்கான இறுதிப்போட்டி, நேற்று (பிப்.,5) நடைபெற்றது. இதில், 19 வயதான இந்தியாவின் தன்யா ஹேமந்த் வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து அவர்
Indian Badminton Player, Tanya Hemanth, Hijab, Forced, Wear Hijab, Award Ceremony, Iran, Fajr International Challenge, Tehran, இந்தியா, வீராங்கனை, தன்யா ஹேமந்த், ஹிஜாப், சர்ச்சை, ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : ஈரானில் நடந்த பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில், பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையை, 'ஹிஜாப்' அணியக்கோரி கட்டாயப்படுத்தியது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.



ஈரான் தலைநர் டெஹ்ரானில்,மகளிர் பாட்மின்டன் போட்டிகளுக்கான இறுதிப்போட்டி, நேற்று (பிப்.,5) நடைபெற்றது. இதில், 19 வயதான இந்தியாவின் தன்யா ஹேமந்த் வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து அவர் பதக்கம் பெறுகையில் ஹிஜாப் அணிந்தவாறு பதக்கம் பெற்ற புகைப்படம் வைரலானது. பதக்கம் பெறும் முன், அவரை, 'ஹிஜாப்' அணியக்கோரி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news

போட்டிக்கான விதிமுறைகளில் ஹிஜாப் அணிவது குறித்து, குறிப்பிடாததால் தன்யா ஹேமந்த் தரப்பில் இருந்து அது பற்றி, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'ஈரானுக்குள் நுழையும்போதே, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமென்பது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால், விளையாட்டின்போது அது பற்றி, நாங்கள் குறிப்பிடவில்லை,' என, போட்டி ஏற்பட்டாளர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.



இப்போட்டியில், வீராங்கனைகள் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், மைதானத்துக்குள் 'ஆண்களுக்கு அனுமதி இல்லை' என்ற, வாசகமும் ஒட்டப்பட்டு, வீராங்கனைகளுடன் சென்ற, ஆண் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் உள்ளே அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

HONDA -  ( Posted via: Dinamalar Android App )
07-பிப்-202308:16:17 IST Report Abuse
HONDA இப்படி இருக்கும் போது போட்டியில் கலந்துகொள்ளளாமா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-202304:57:52 IST Report Abuse
J.V. Iyer இப்போதுதானே பெண்கள் எல்லாவற்றையும் துறந்து, வீதியில் எதிர்ப்பை தெரிவித்தனர்? இவர் இஸ்லாம் இல்லாதபோது கட்டாயப்படுத்துவது காட்டுமிராண்டித்தனம்.
Rate this:
Cancel
06-பிப்-202320:18:53 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஈரானின் குடிமக்களே எதிர்க்கும் ஒரு நடைமுறையை மற்றவர் மீது திணிப்பது ஏன் ????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X