அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை ஆளப்போகும் 2 லட்சம் ரோபோக்கள்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
ரோபாடிக்ஸ் துறை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்து வருகிறது. உலகின் பல நவீன பெருநகரங்கள் பலவற்றில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோக்களைப் பயன்படுத்த பல நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. மத்திய தரைக்கடல் நாடான துபாயில் அடுத்த 10 ஆண்டுகளில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் மொத்த கொள்முதல் உற்பத்தி 9
2 lakh robots in Dubai in next ten years  அடுத்த 10 ஆண்டுகளில் துபாயை ஆளப்போகும் 2 லட்சம் ரோபோக்கள்

ரோபாடிக்ஸ் துறை அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்து வருகிறது. உலகின் பல நவீன பெருநகரங்கள் பலவற்றில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோக்களைப் பயன்படுத்த பல நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. மத்திய தரைக்கடல் நாடான துபாயில் அடுத்த 10 ஆண்டுகளில் முழுக்க முழுக்க ஆட்டோமேஷன் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் மொத்த கொள்முதல் உற்பத்தி 9 சதவீதம் அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு கணித்துள்ளது.

இதற்காக தற்போது துபாய் ரோபோடிஸ் மற்றும் ஆடோமேஷன் திட்டம் அந்நாட்டு இளவரசர் ஷேக் ஹம்டன் பின் முகமது பின் ரஷித் அல் மாக்டோம்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் லாஜிஸ்டிக்ஸ், மருத்துவத் துறை, பொது சேவை, வங்கி உள்ளிட்ட துறைகளில் ரோபோக்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோபோக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் துபாய் ஃப்யூச்சர் லேப்ஸ் ரோபோ தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தற்போது இந்நிறுவனத்தின் ஆர் & டி பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். துபாய் அரசு ரோபோ தயாரிப்புக்காக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கியுள்ளது.


latest tamil news


துபாய் சிலிக்கான் ஒயாஸிஸ் பகுதியில் விரைவில் 'ரோபோ டே' விழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நாட்டின் தலை சிறைந்த ரோபோக்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும். கலீஃபா பல்கலை, ரோச்செஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இந்த ரோபோ டே விழாவில் கலந்துகொள்ளவுள்ளன. சேவை ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் உள்ளன. இதனால் இவற்றில் 25 சதவீதம் ரோபோக்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-202304:56:22 IST Report Abuse
Kasimani Baskaran கூகிள் குப்பைத்தொட்டிக்கு போய் விடும் போல தெரிகிறது...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-பிப்-202304:55:09 IST Report Abuse
J.V. Iyer பல வெளிநாட்டவர்களின் வேலைக்கு ஆப்பு.
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
07-பிப்-202302:52:21 IST Report Abuse
பிரபு துபாயை மட்டும் அல்ல, உலகத்தையே ரோபோக்கள் ஆளப்போகிற நாட்கள் வெகு தூரம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X