ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார பைக் வருகின்ற 2024 ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ராயல் எப்ஃபீல்டு நிறுவனம், இந்திய சந்தையில், 650சிசி எஞ்ஜின் பைக் தயாரிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் தனது மீட்டியோர் 650 பைக்கை அறிமுகம் செய்தது. இதனைத்தொடர்ந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தனது எலெக்ட்ரிக் பைக் கான்செப்ட்டை கையில் எடுத்துள்ளது. அதாவது, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை வருகிற 2024ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ள என தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில், ஓலா, ஏத்தர், டிவிஎஸ், ஹீரோ, என பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வரும் நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களிலேயே ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் வெளியாகிவிடும் என்கிற சூழல் உருவாகி உள்ளது. மேலும், 18 இல் இருந்து 24 மாதங்களுக்குள் இந்திய மின் வாகன சந்தையில் தனது கால்தடத்தை பதிக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
![]()
|
இதற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான உமேஷ் கிருஷ்ணப்பாவை மின் வாகன உற்பத்திக்காக பணியமர்த்தியுள்ளது. இவரே இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கான ராயல் என்பீல்டு மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்திற்காக 100 - 150 அமெரிக்க டாலர்களை நிறுவனம் முதலீடு செய்துள்ளது மட்டுமல்லாமல், உற்பத்திக்கான தனி பிளாட்பாரத்தையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()
|
இந்த பிளாட்பாரம் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஆண்டிற்கு 1.2 லட்சம் முதல் 1.8 லட்சம் யூனிட் வரையில் எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், பல்வேறு நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுபோக, ராயல் என்ஃபீல்டு என்றாலே அதன் எக்சாஸ்ட் சவுண்டிற்கு ரசிகர்கள் அதிகம். ஆனால் தற்போது வரும் எலெக்ட்ரிக் பைக் வழக்கமான எலெக்ட்ரிக் பைக் போலவே சத்தமில்லாமல் இயங்கக் கூடியாதாக உருவாக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.