குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: யாருக்கு எத்தனை குண்டுகள் முழங்கும்?

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறைக்கு பங்களிப்பு செய்தவர்கள் மறையும் போது, அவர்கள் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்படும். ஆரம்பத்தில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், கேபினட் அமைச்சர்கள் மறைவுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும். பின்னர் யாருக்கு அரசு முழு மரியாதை வழங்கலாம்
STATEHONOUR, முழுஅரசுமரியாதை, குண்டுகள்முழங்க

அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறைக்கு பங்களிப்பு செய்தவர்கள் மறையும் போது, அவர்கள் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.

ஆரம்பத்தில் முன்னாள், இந்நாள் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், கேபினட் அமைச்சர்கள் மறைவுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும். பின்னர் யாருக்கு அரசு முழு மரியாதை வழங்கலாம் என்பதை மாநில அரசே முடிவு செய்யும் வகையில் விதிகள் மாற்றப்பட்டன. அதன்படி தற்போது முதல்வர் கேபினட் அமைச்சர்களுடன் கூடி விவாதித்து, முடிவு எடுப்பர்.

அரசு முழு மரியாதை என்பது, அந்நபர் இறந்த நாள் மாநிலத் துக்க தினமாக அனுசரிக்கப்படும். அவர்களது உடலுக்கு மாநில காவல் துறை சார்பில் இறுதி வணக்கம் செய்யப்பட்டு, குண்டுகள் முழங்க வழி அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர் ஆகியோர் மறைவுக்கு இந்த மரியாதை வழங்கப்படுகிறது. சமீபத்தில் மறைந்த பிரபலப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கும் இவ்வாறு அரசு முழு மரியாதை செய்தது. இந்தியாவில் முதன் முதலில் மகாத்மா காந்தி மறைவுக்கு தான் அரசு முழு மரியாதை வழங்கப்பட்டது.


குண்டுகள் முழங்குவது ஏன்?


latest tamil news

தலைவர்கள், கலைஞர்கள் இறப்பின் போது அரசு மரியாதையின் ஒரு சடங்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவர். இந்த பிரிட்டிஷார் கடைப்பிடித்த பாரம்பரியம். அது இன்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. நாடு நாடாக சுற்றி வந்த பிரிட்டிஷார், அந்த காலக்கட்டத்தில், வேறுநாட்டிற்கு கடல் மார்க்கமாக நுழையும் போது, தங்களிடம் உயிரைப் பறிக்கும் ஆயுதங்கள் ஏதுமில்லை என எதிரிகளிடம் காட்டுவதற்காக, தங்கள் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை வானத்தை நோக்கி சுட்டு தோட்டாக்களை காலி செய்துள்ளனர். 17ஆம் நூற்றாண்டில் இருந்த இந்த முறை அப்படியே கடற்படையின் மரபாகிப் போனது. பின்னர் ராணுவம் மற்றும் தலைவர்களின் இறப்புக்கும் குண்டுகள் முழுங்க மரியாதை செய்வது தொடங்கியது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த குண்டுகள் முழங்க மரியாதை என்பது கடைபிடிக்கப்பட்டது. அப்போது மறைந்தவர் அரசர் எனில் 101 குண்டுகள் சுடப்பட்டன. பின்னர் இன்று உலகளவில் 21 குண்டுகள் என்பது பொதுவாகிவிட்டது. 52 விநாடிகளில் இந்த 21 குண்டுகள் முழங்கும். சுடப்பட்ட குண்டுகளை அங்கேயே விட்டுச் செல்லமாட்டார்கள். அதனை சேகரித்து அதிகாரிகளிடம் வழங்குவர். முப்படைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் மறைவுக்கு 17 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடக்கும். சமீபத்தில் மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு 17 குண்டுகள் முழங்க மரியாதைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07-பிப்-202305:59:25 IST Report Abuse
N Annamalai செய்தி இன்னும் விரிவாக கொடுத்து இருக்கலாம்
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
06-பிப்-202320:10:35 IST Report Abuse
Godyes வெள்ளைக்காரன் தான் நிராயுதபாணி என்பதை எதிரிகளுக்கு காட்ட துப்பாக்கி தோட்டாக்களை வானில் விட்டான். அறிஞர் ஆராய்ச்சியாளர் போன்ற பிரபலங்களுக்கு இம்முறை தேவை இல்லை.அதற்கு பதில் காலமானவரை போற்றும் அவரது வாழ்நாள் சாதனைகளை விளக்கும் பேனர்களை சவ ஊர்வலத்தில் எடுத்து செல்லலாம்.
Rate this:
Cancel
Jay - Chennai,இந்தியா
06-பிப்-202319:52:16 IST Report Abuse
Jay வாணி ஜெயராம் அவர்களுக்கு முப்பது குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X