வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் கூட்டம், மூன்றாவது முறையாக மீண்டும் கடும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட, ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
![]()
|
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மூன்றாக இருந்த மாநகராட்சி, புதுடில்லி மாநகராட்சியாக ஒருங்கிணைக்கப்பட்டது. கடந்த, டிசம்பரில் மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வென்றது.இதைத் தொடர்ந்து மாநாகராட்சி மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு எதிராக பா.ஜ.,வும் வேட்பாளரை களமிறக்கியது.கடும் அமளி ஏற்பட்டதால், ஜன.,6 மற்றும் 24ம் தேதிகளில் நடந்த கூட்டங்களில் மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டம் நடந்தது.
மேயர் தேர்தலுடன், துணை மேயர் மற்றும் ஆறு நிலைக் குழுக்களுக்கான தலைவர்களை தேர்வு செய்யும் தேர்தலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆம் ஆத்மி கடும் ஆட்சேபம் தெரிவித்தது.இது தொடர்பாக இரு கட்சியினரும் கடுமையாக வாதிட்டனர்.கூச்சல், குழப்பம் நிலவியதால், மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக, ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement