வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவில் அ.தி.மு.க. அவைத்தலைவருக்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க.,வேட்பாளர் தேர்வுக்கு, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
![]()
|
அ.தி.மு.க.,வில் உள்ள இரு தரப்பையும் சேர்ந்த, 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதங்களுடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்பித்தார். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, அவைத்தலைவராக அங்கீகாரம் வழங்கியது. மேலும் வேட்புமனுக்களில் ஏ. மற்றும் பி. படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.