கோவை: கரூர் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில், மாவட்ட பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மருதாசலம்,70. கோவை, சாய்பாபா காலனியில் வசித்து வரும் இவர், 1998, ஜன., முதல் 2002, செப்., வரையில், வருமானத்துக்கு அதிகமாக, 23.51 லட்சம் சொத்து குவித்த வழக்கு, கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
அரசு தரப்பில், 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 64 ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரித்த நீதிபதி இந்துமதி, குற்றம்சாட்டப்பட்ட மருதாசலத்திற்கு, மூன்றாண்டு சிறை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.