சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு வழக்குகளில், திருடர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை, உரியவர்களிடம் ஒப்படைத்தார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.
அப்போது பேசுகையில், 'சென்னையில், 'பூட்டப்பட்ட வீடுகள்' என்ற புதிய திட்டத்தை, அறிமுகம் செய்ய உள்ளோம்; இது, 'இ - பீட்' திட்டத்துடன் இணைக்கப்படும். வெளியூர் செல்வோர் இணையதளத்தில் பதிவு செய்தால், இரவு ரோந்து போலீசாருக்கு தகவல் செல்லும்.
'ரோந்து போலீசார், தினமும் மூன்று முறை அந்த வீட்டை கண்காணிப்பர். திட்டத்தை ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வரமுயற்சித்து வருகிறோம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனா, குடும்பத்தோடு வெளியூர் போறவங்க, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்'பில் 'ஸ்டேட்டஸ்' வச்சாலும் வைப்பாங்க... போலீசை நம்பி தகவல் சொல்ல மாட்டாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.