இனி நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிரலாம்...ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கு

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | |
Advertisement
பாஸ்வேர்டு பரிமாற்றம் தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.பிரபல பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், யாரும் அசைக்க முடியாத நிலையில், முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், வருவாய் மற்றும் சந்தாதாரர்களை அதிகரிக்கும் நோக்கில் லாக்-இன் பாஸ்வேர்டை பயனர்கள் பிறரிடத்தில் பகிர்வது முடிவுக்கு
Dinamalar, Technology, Netflix, Password, தினமலர், நெட்ஃப்ளிக்ஸ், பாஸ்வேர்டு

பாஸ்வேர்டு பரிமாற்றம் தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பிரபல பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், யாரும் அசைக்க முடியாத நிலையில், முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், வருவாய் மற்றும் சந்தாதாரர்களை அதிகரிக்கும் நோக்கில் லாக்-இன் பாஸ்வேர்டை பயனர்கள் பிறரிடத்தில் பகிர்வது முடிவுக்கு வரவுள்ளதாக அறிவித்தது. இந்த கட்டுப்பாடு, விரைவில் உலகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளதாக தெரிவித்த நெட்ஃப்ளிக்ஸ், பாஸ்வேர்டு பரிமாற்றம் தொடர்பாக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்காக அதன் Help Center பக்கத்தை அந்நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.latest tamil news


இது குறித்து நெட்பிளிக்ஸின் புதிய இணை தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சாண்டோஸ் ஆகியோர் ப்ளூபெர்க், இனி ஒரு நெட்பிளிக்ஸ் கணக்கை ஒரு வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், அடுத்த மாதத்திற்குள் இந்த புதிய அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய அப்டேட்டில் என்ன மாற்றங்கள்?

தற்போது வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் என்னவென்றால், நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்த புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்தாலும் உங்களால் நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டு விவரங்களை பகிரமுடியும். ஆனால் அது உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே மட்டும்தான் பகிரமுடியும். இதற்காக நீங்கள் இருக்கும் இடத்தின் வைபை லொகேஷனை(wifi Location) ஆன் செய்து நெட்பிளிக்ஸ் ஆப் மூலம் மாதம் ஒருமுறையாவது திரைப்படங்களை பார்க்கவேண்டும். அப்படி, நெட்பிளிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டு விவரங்களை, குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுடன் பகிர வேண்டுமேயானால் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.latest tamil news


மேலும், வீட்டில் இல்லாமல் வேறு எங்காவது பயணம் மேற்கொள்ளும்போது ஒரு சாதனத்தில் நெட்பிளிக்ஸ் பயன்படுத்தினால், அதற்காக தற்காலிகமாக லாக் இன் கோட் (Log in Code) ஒன்று வழங்கப்படும். இந்த கோடை பயன்படுத்தி 7 நாட்களுக்கு நாம் அக்கவுண்டை பயன்படுத்த முடியும். ஃப்ரீலோடிங் செய்யும் பயனர்கள், விருப்பத்தேர்வுகள், விருப்பு வெறுப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட தரவை இழக்காமல் புதிய கணக்கிற்கு தங்கள் சுயவிவரங்களை மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news


இதுமட்டுமல்லாமல், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் குழந்தைகளுக்காக 'கிட்ஸ் மிஸ்டரி பாக்ஸ்' என்ற புதிய அம்சத்தையும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகள் வேறு வீடியோக்களுக்கு செல்லாமல் நேரடியாக கார்ட்டூன் மற்றும் கிட்ஸ் திரைப்படங்கள் மட்டுமே காண முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X