பிப்ரவரி 7, 1902
தென்காசி மாவட்டம் கோமதிமுத்துபுரத்தில், ஞானமுத்து - பரிபூரணம் தம்பதிக்கு மகனாக, 1902ல் இதே நாளில் பிறந்தவர் தேவநேயர்.
இளமையிலேயே பெற்றோரை இழந்த இவர், திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூரில் வசித்த, சகோதரி பாக்கியத்தாயின் வீட்டில் வளர்ந்தார். சென்னை பல்கலை வித்வான் தேர்வு மற்றும் முதுகலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து பல ஊர்களில் பள்ளி ஆசிரியராகவும், பல்கலைகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 'மொழியாராய்ச்சி' கட்டுரைகள், ஆய்வு நுால்களை எழுதினார். 1981 ஜனவரி, ௫ல், மதுரையில் நடந்த ஐந்தாவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில், 'மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்' என்ற தலைப்பில், 75 நிமிடங்கள் பேசினார்.
அன்றிரவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், ஜனவரி, 15ல், தன், 79வது வயதில் காலமானார்.
செந்தமிழ் சொற்பிறப்பியல், அகரமுதலி திட்ட இயக்ககத்தின் முதல் இயக்குனரான, தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று!