புதுடில்லி, வடகிழக்கு மாநிலங்களுக்கு குறைவான விமானங்களை இயக்கியதற்காக, 'விஸ்தாரா' விமான நிறுவனத்திற்கு, விமான போக்குவரத்து இயக்குனரகம், 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துஉள்ளது.
'நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு கட்டாயமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க வேண்டும்' என்ற விதிமுறை உள்ளது.
இதை மீறி குறைந்த அளவில் விமானங்களை இயக்கியதற்காக, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இந்த அபராதத் தொகையை விஸ்தாரா நிறுவனம் இம்மாதம் கட்டியதாகவும், விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி தெரிவித்தார்.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் 'டாடா குழுமத்தின்' ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிய அனுமதி கிடைத்த பின், ஏர் இந்தியாவுடன், விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்து உள்ளது.