சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் :'நிடி ஆயோக்' துணைத் தலைவர் பரிந்துரை

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி :சில முக்கியமான உள்ளீட்டு பொருட்களின் தேவைக்காக, சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, 'நிடி ஆயோக்' துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, முக்கியமான உள்ளீட்டு பொருட்களுக்கு, அந்நாட்டை அதிகம்
சீனா,  நிடி ஆயோக்,  பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :சில முக்கியமான உள்ளீட்டு பொருட்களின் தேவைக்காக, சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, 'நிடி ஆயோக்' துணைத் தலைவர் சுமன் பெரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, முக்கியமான உள்ளீட்டு பொருட்களுக்கு, அந்நாட்டை அதிகம் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில்

அதிக கவனம் எடுக்க வேண்டும்.



latest tamil news

துரதிருஷ்டவசமாக, கடந்த 7 ஆண்டுகளாக, அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் வர்த்தகத்தை ஓர் ஆயுதமாக தேர்ந்தெடுத்துள்ளன.சீன நிறுவனங்கள் சந்தைகளை தேடுகின்றன. இந்திய சந்தையை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ள விரும்புகின்றன. அதன் ஏகபோகத்தை தடுக்க, அதை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பல முக்கியமான உள்ளீட்டு பொருட்களுக்காக சீனாவை சார்ந்துள்ளது. குறிப்பாக, மருந்து பொருட்களுக்காக அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கடந்த 2022ல், இந்தியாவுக்கு 9.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 21.7 சதவீதம் அதிகம்.
அதேசமயம், இந்தியாவிலிருந்து 1.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களையே இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 37.9 சதவீதம் குறைவாகும்.
இதையடுத்து, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மிகவும் அதிகரித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

07-பிப்-202311:31:44 IST Report Abuse
அப்பாசாமி அதான் சீன ஆப் களை ஆஃப் செஞ்சுட்டோமே... வெற்றி.. வெற்றி. விவரம் தெரியாம பேசாதீங்க.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
07-பிப்-202310:52:55 IST Report Abuse
Appan The latest import stats from China are mainly electronics. Indi's export raw materials to China..There is a huge trade gap between China and India…India for the last 75 years is not able to produce silicon wafer, which is used for chips manufacturing. Big talk like Santhanam, Sanskrit, temples etc..did not produce a single Nobel urate for the last 9 yrs of BJP rule.. Country should have scientific temper to innovate…The slogan of one country, one language, Santhanam etc..can not give tech skill to produce silicon wafers and feed 1.4 Bill people. India should wakeup else it will go like Pakistan
Rate this:
Cancel
07-பிப்-202309:30:42 IST Report Abuse
ஆரூர் ரங் சூழ்நிலைகேடு பற்றிய சட்டங்களால் பல உள்ளீடு பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல ஏழைநாடுகளின் சுரங்கங்களை சீனா🤫 கபளீகரம் செய்திருப்பதால் மூலப்பொருட்கள் உற்பத்தியில் அவர்களது கை மேலோங்கி இருப்பது இன்னொரு காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X