அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள லுார்துபுரத்தில், புனித லுார்து அன்னை சர்ச் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் தலைமையில், திருப்பலி முடிந்து அன்னையின் திருக்கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
காரமடை பங்கு தந்தை சிஜூ தலைமையில், ஜெபமாலை, திருப்பலி, நவநாள், ஆராதனை நடைபெற்றது. 11ம் தேதி மறை மாவட்டம் முதன்மை குரு ஜான் ஜோசப் தலைமையில், துதி ஆராதனை, ஜெபமாலை, திருப்பலி, ஆடம்பர கூட்டுப்பாடல் நடைபெறுகிறது. பின், தேர் பவனி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 12ம் தேதி மோகன் மரிய திவ்யராஜின் திருப்பலி, கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில், திருப்பலி, கோவை மேய்ப்புப்பணி நிலைய அந்தோணி செல்வராஜ் சிறப்பு ஜெபமாலை, நவநாள் வேண்டுதலும் நடைபெறும். சிறுமுகை பங்கு தந்தை லுார்து இருதயராஜ் தலைமையில், ஜெபமாலை தொடர்ந்து, தேர் பவனியும் நடைபெறும் என சர்ச் நிர்வாகிகள் தெரிவிதனர்.