திருப்பூர்:அவிநாசி- - மேட்டுப்பாளையம் இடையே, கருவலுார் பகுதியில் சாலையோரம், சாலை புதுப்பிக்கும் பணி, நெடுஞ்சாலைத் துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
சாலையோரம் புதுப்பிக்கப்பட்ட சாலை, ஒரே இரவில் சிதைந்து, பெயர்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில், சிதைந்த பகுதிகளில் நிலத்தை ஸ்திரப்படுத்தி, தார் ஊற்றி, மீண்டும் புதுப்பிப்பு பணி மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement