திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோட்டிலுள்ள, மெரிட் மெட்ரிக்குலேசன் பள்ளியில், மாணவர் கற்பிக்கும் நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில், ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் பாடம் கற்பித்தல் முறையில் பெற்றோர்களும் பங்கேற்ற, மாணவ, மாணவியரின் கற்பித்தல் திறனை பார்வையிட்டனர். மாணவர் நடத்திய வெளிஅரங்க விளையாட்டுகளில் ஆர்வத்தோடு பலர் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் கவுதம், 'மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சாதிக்க வேண்டும்,' என்ற தலைப்பில் பேசினார். பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி செயல் அறங்காவலர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.